மது ஆன்மா லயமாகி, ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்து வெற்றிபெறச் செய்யும் இடமே ஆலயம் எனப்படுகிறது. "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' என்றார் திருமூல நாயனார். நம் உள்ளமும் அதை வைத்திருக்கும் உடம்பும் சென்றால், நல்ல எண்ணங்களையும், மனத்தூண்டலையும் கொடுக்கும் ஆலயமொன்று காஞ்சிபுரம் மாவட்ட கிழக்கு பாகத்தில் உள்ளது.

Advertisment

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கால கற்றளிகள் இத்தலத்தைச் சுற்றிலும் காணக்கிடைக் கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தின் அடையாளங்களைக் காட்டும் சின்னம் வரையப்பட்ட மண்டப மேல்தள அமைப்புகள் ஆலயத்தின் பழமையை நமக்கு எடுத்துக்காட்டு கின்றன.

govindan

ஆம்; அதுதான் கொழுமணிவாக்கம் என்னும் மகாவிஷ்ணுவின் சாந்நித்யம் நிறைந்துள்ள தலம். ஸ்ரீலட்சுமி நாரா யணர் என்ற திருநாமத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

Advertisment

ஆலயம் பற்றிய பிரசன்னத்தையும், திக்குகளையும் ஆராய்ந்தபோது ராகு- கேது தோஷங்கள் போக்கும் பரிகாரத் தலமாக முற்காலத்தில் இருந்து, இடையில் வழிபாடுகள் குறைந்தது தெரியவந்தது. தற்போது திருப்பணிகள் நடந்துவருகின்றன.

வினையகற்றும் விஷ்ணு புட்கரணி ஆலயத்தின் வடபாகத்தில் மிகப் பெரிய திருக்குளம் உள்ளது. பெருமா ளுக்குச் செய்யப்படும் திருமஞ்சன நீர் கோமுகம்வழியாக பூமிக்குள் சென்று புட்கரணி நீருடன் கலப்பது விசேடமான செய்தி. மருத்துவ குணம் கொண்ட இந்தக் குளத்தில் புனித நீராடினால் செய்வினை, பித்ரு தோஷங்கள் அகன்றுவிடும். கோமுகத்திலிருந்து 64 அடி தூரத்தில் அமிர்தவாவியாக அமைந்த பொய்கைக் கரையில், சனிக் கிழமை மாலையில் திருமஞ்சனம் நடைபெறுகிறபோது ஸ்ரீவிஷ்ணு பாதத் திற்கு துளசி பூஜைசெய்து, பித்ரு தர்ப் பணமும், வஸ்திரம், ஸ்வர்ணதானமும் இரண்யகர்ப்ப மந்திரங்களோடு செய்வ தால் பித்ருக்களின் ஆசி கிடைத்து, குடும்ப முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள பித்ரு தோஷங்கள் விலகும். அமாவாசையன்று பித்ரு தர்ப்பண பூஜை யுடன் மாத்ரு ஷோடசீ-16 பிண்ட ப்ரதானம் செய்திட பதினாறு தலைமுறை பித்ருக்கள் திருப்தியடைவார்கள். இதனால் தாய்- தந்தையருக்குச் செய்யாமல் விட்ட திதி களுக்குத் தீர்வும் பிராயச்சித்தமும் ஏற்படும். இங்கு விஷ்ணுபாதத்தைச் சிறியளவில் வைத்து பித்ருப் பிரீதி செய்வது நலம் கூட்டும்.

கல்லாகி நின்ற அனுமன்

ஆலயத்துக்கு முன்புறம் அனுமன் ஆறடி உயரத்தில் கல்லாகி நிற்கிறார். ஒருசமயம் ஸ்ரீராமரும் சீதையும் கருவறையில் பேசிக் கொண்டிருந்தபோது, அனுமதி கேட்காமல் உள்ளே சென்றுவிட்ட அனுமனைக்கண்ட ஸ்ரீராமர், "கல்லாய் சற்று தள்ளி நில்லாய் எம்பிள்ளாய்' என்று சொல்லிவிட்டாராம். அன்பின் மிகுதியால் தன் நாதன் சொன்னதை ஏற்றுப் பின்னால் சென்றபடியே தூரத் தில் கல்லாகி நின்றுவிட்டார் ராமதூதன். கொடிமரம் கடந்து நிற்கும் அனுமனுக்கு வியாழன், சனிக்கிழமை, அமாவாசை தினங் களில் எண்ணெய் மெழுகி துளசியிட்டு, உளுந்துவடை நிவேதனம் செய்து பிரார்த்திக்க, தடைக்கற்கள் அகலுவதுடன், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபடலாம்.

Advertisment

விஷ்ணு தீர்த்தத்தின் கிழக்குக் கரையில் தீர்த்தக்கரை விநாயகர் அமர்ந்துள்ளார். அருகே திருவருட்பிரகாச வள்ளலார் தொடங்கிய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்- ஊர்மக்கள், குழந்தைகளுக்கு பக்திநெறி புகட்டி நல்லொழுக்கத்தைக் கற்பிக்கிறது.

தெய்வ மூர்த்தங்களின் சக்தி

govindan

ஸ்ரீலக்ஷ்மி தேவியை மடியில் வைத்தபடி மூலஸ்தானத்தில் ஸ்ரீமன் நாராயணர் கிழக்கே திருமுக மண்டலத்துடன் காட்சிதருகிறார். ஒரே கருவறையில் கருடாழ்வார், ஸ்ரீராமர், சீதாதேவி, லட்சுமணருடன் நின்ற கோலத்தில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் துவார பாலகர்கள் நின்றிருக்க, மகாமண்டபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் கண்டாலே மனநிம்மதியைத் தரும் இராமாயணக்கதைக் கூறும் ஆறு கல்தூண்களை சிற்பங்களோடு கண்டு வணங்கலாம்.

பூஜைகள், பிரார்த்தனை முறைகள்

சனிக்கிழமைதோறும் மாலை 5.00 மணிக்கு ஸ்ரீலக்ஷ்மி நாரா யணருக்குத் திருமஞ்சனமும் மலர் அலங்கார மும் நடைபெற்று வருகிறது. அதுசம யம் பக்தர்கள் திவ்யப் பிரபந்தப் பாராயணம் செய்து எம்பெரு மானுக்குச் சாற்று முறை செய்வர். வெளியூர்களிலிருந்து வரும் பக்தகோடிகள் பெருமாளின் போற்றிப் பாடலைப் பாடுகிறார்கள்.

திருமஞ்சன காலத்தில் துளசியால் அர்ச்சனை செய்து, நெய்தீபமிட்டுத் தாயாருக்குத் தாமரை மலர் சாற்றி, ஸ்ரீவிஷ்ணு பாதத்திற்குத் துளசி இட்டு ஸ்ரீபாதுகா சகஸ்ரத் துதிகளைப் பாடிட, வாழ்க்கையில் எப்படிப்பட்ட வறுமையும், சோதனைகளும் அகன்று, செய்யும் தொழிலில் விருத்தியடையக் காணலாம்.

ஜனவரி-6, திங்கட்கிழமை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு, பெருமாளுக்கு காலை எட்டு மணிக்கு விசேட திருமஞ்சனமும், தொடர்ந்து மாலை ஆறு மணிவரை ஸ்ரீவிஷ்ணு பாத தரிசனமும் பக்தர்களுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. ஆன்மிக அற்புதங்கள் நிறைந்துள்ள, மகாபாக்கியங்கள் தரும் மாதவனின் சந்நிதானத் திற்கு பக்தகோடிகள் ஒருமுறை சென்றுவருக.

கோவிலை அடைய வழி: சென்னை, பூந்தமல்லியிலிருந்து குன்றத்தூர் பஸ்வழியில், மாங்காட்டை அடுத்துள்ள கொழுமணிவாக்கம் பஸ் நிறுத்தத்தை அடைந்து, அங்கிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஊருக்கு மேற்கேயுள்ள ஆலயத்தை அடையலாம்.